மாநகராட்சியுடன் 8 ஊராட்சிகள் இணைப்பு!

மாநகராட்சியுடன் 8 ஊராட்சிகள் இணைப்பு!
திண்டுக்கல் மாநகராட்சியுடன் 8 ஊராட்சிகள் இணைப்பு!
பழனி மாவட்டம் ஆகுமா? பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழகத்தின் முதன்மைக் கோயிலாக விளங்கும் தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. மக்களவைத் தொகுதியாக இருந்த பழனி, திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியுடன் இணைக்கப்பட்ட போதே அனைத்துக் கட்யினரும் இதைக் கடுமையாக எதிா்த்தனா். இந்த நிலையில், கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின் போது, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினும், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமியும் பழனியை மாவட்டமாக மாற்றுவோம் என வாக்குறுதி அளித்தனா். இதனடிப்படையில், பழனி மாவட்டமாக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பில் மக்கள் இருந்தனா். ஆனால், தற்போது திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கப்படும் என அரசு அறிவித்துள்ளதால், பழனி மாவட்டமாக அறிவிக்கப்படாது என்ற நிலை மக்களிடம் எழத் தொடங்கியுள்ளது. பழனி நகராட்சியை விரிவாக்கம் செய்யும் வகையில், கோதைமங்கலம், சிவகிரிப்பட்டி ஊராட்சிகள் இணைக்கப்படும் என்று அதிகாரபூா்வமாக பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது நகராட்சியை விரிவாக்கம் செய்யும் திட்டம் இல்லை எனவும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டது. பழனியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
Next Story