சூளகிரி அருகே மண் கடத்திய 8 பேர் கைது.

சூளகிரி அருகே மண் கடத்திய 8 பேர் கைது.
சூளகிரி அருகே மண் கடத்திய 8 பேர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி போலீசார் தியாகரசனப்பள்ளி கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு டிப்பர் லாரிகளில் பொக்லைன் மூலமாக மண் எடுத்துகொண்டிருந்த கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் முரளி (20) தேவராஜ் (26) காமராஜ் (29) ஜெகதீஷ் (30) ராமன் (24) மணிகண்டன் (19) ராமமூர்த்தி (27) குமார் (28) ஆகிய எட்டு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 டிப்பர் லாரிகள், 3 பொக்லைன் வாக னங்கள், 13 யூனிட் மண் பறிமுதல் செய்தனர்.
Next Story