இளைஞர் கொலை வழக்கில் 8 பேர் கைது

இளைஞர் கொலை வழக்கில் 8 பேர் கைது
X
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இளைஞர் கொலை வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மின்நகரைச் சேர்ந்த மாணிக்கம் மகன் சண்முகநாதன்(27). இவரை ஜன. 31-ம் தேதி ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இதுகுறித்து திருப்பத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். உடலை வாங்க மறுத்த உறவினர்கள் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஷிஷ் ராவத்திடம் மனு கொடுத்தனர். இந்நிலையில் சண்முகநாதன் கொலை தொடர்பாக திருப்பத்தூர் சீதளிவடகரையைச் சேர்ந்த ராஜேஸ் என்ற பூமிநாதன்(25), காந்தி நகரைச் சேர்ந்த பத்மசீனிவாசன்(24), பிரபாகர் காலனியை சேர்ந்த சீனிவாசன்(27), ஜே.ஜே. நகரைச் சேர்ந்த கார்த்திகேயன்(20), மதுரை ரோட்டைச் சேர்ந்த வசந்த்(20) உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story