*ஜெயங்கொண்டம்- இறந்தும் 8 பேரை காப்பாற்றிய விவசாயி.

X
அரியலூர், பிப்.8- ஜெயங்கொண்டம் அருகே மூளை சாவு அடைந்து 8 பேரை வாழ வைத்த விவசாயி பசுமை குமாரும் உடலுக்கு மருத்துவர்கள் அரசு அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்* அரியலூர் மாவட்டம் காசாங் கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பசுமை குமார். 44 வயதான இவர் தனது 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார் இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளன இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி பசுமை குமார் கால்நடைகளுக்கு இலை வெட்டும் போது மரத்தில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தவர் அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பசுமை குமார் சிகிச்சை பலனின்றி மூளை சாவு அடைந்தார் மருத்துவர்கள் கேட்டு கொண்டதற்க்கு இணங்க அவரது உடல் உறுப்புகள் இதயம் ,கல்லீரல் உள்ளிட்ட 8 உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இறந்தும் 8 பேருக்கு உயிர் கொடுத்த பசுமை குமாரும் உடலுக்கு மருத்துவர்கள் செவிலியர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர் இதனை அடுத்து அவரது உடல் அவரது சொந்த ஊரான காசினங்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டது அங்கு வைக்கப்பட்டிருந்த பசுமை குமாரின் உடலுக்கு உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
Next Story

