குமரி :  8 -ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை

குமரி :  8 -ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை
X
ஈத்தாமொழி
குமரி மாவட்டம் ஈத்தாமொழி பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் (38). தேங்காய் வெட்டும் தொழிலாளி. இவருக்கு தேவி (38) என்ற மனைவியும் மூன்று பெண் குழந்தைகளும்  உள்ளனர். மூத்த மகள் ரதீஷா (14). அருகில் உள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.       கடந்த பத்தாம் தேதி ரதிஷாவிற்கு பிறந்தநாள் வந்தது. அன்று பெற்றோரிடம் புதிய ஆடை வாங்கி கேட்டுள்ளார். பெற்றோர் பள்ளிக்கு சென்று வா... மாலையில் புதிய ஆடை வாங்கி தரலாம் என்று கூறி சாக்லேட் மட்டும் கேக் கொடுத்து பள்ளிக்கு அனுப்பினர்.      மாலையில் பள்ளியில் இருந்து வந்து கேட்டபோது மறுநாள் வாங்கித் தருவதாக பெற்றவர் கூறி உள்ளனர். இதனால் ரதிஷா  சண்டை போட்டுவிட்டு, வீட்டிலிருந்து எறும்பு பொடியை கரைத்து குடித்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்தார். பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு  குமரி அரசு மருத்துவ கல்லூரி  மருத்துவமனையில் சேர்த்தனர்.       அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை ரதிஷா உயிரிழந்தார். இது குறித்து ஈத்தாமொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story