ராணிப்பேட்டை: ஆன்லைனில் பணம் இழந்த.8 லட்சம் மீட்பு!

X
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 41). இவர் கடந்த ஜனவரி மாதம் 4-ந் தேதி டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட எஸ் பி அலுவலகத்தில் புகார் அளித்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா உத்தர வின் பேரில், இணையவழி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சதீஷ்குமார் ஆன்லைனில் இழந்த ரூ.8 லட்சத்தை மீட்டு அவரிடம் போலீஸ் சூப் பிரண்டு விவேகானந்த சுக்லா ஒப்படைத்தார். இணைய வழி குற்றப்பிரிவு கூடுதல் எஸ் பி குணசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story

