நிருபர்கள் போர்வையில் மிரட்டி பணம் பறிப்பு 8 பேர் கைது

X
குமரி மாவட்டம் விழுந்தயம்பலம் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் ராஜ் (35). இவர் பைனான்ஸ் நடத்தி வருகிறார். கடந்த சில தினங்கள் முன்பு இவருக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் நீதி வலை பத்திரிகையின் நிருபர் என கூறி சம்மந்தபட்ட பைனான்சில் அதிக வட்டி வாங்குவதாகவும், அடகு வைக்கும் நகைகளை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்வதாகவும் மிரட்டியுள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் ஜஸ்டின் ராஜை அழைத்து 1 லட்ச ரூபாயுடன் புதுக்கடை அருகே கூட்டாலுமூடு பகுதியில் வர கூறியுள்ளனர். இது குறித்து ஜஸ்டின் ராஜ் புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடி புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆலோசனையின் படி ஜஸ்டின் ராஜ் கூட்டாலுமூடு சென்றார். அங்கு ஒரு காரில் போலி நிருபர்கள் இருந்துள்ளனர். ஜஸ்டிராஜ் சென்றனும், பணத்தை கேட்டுள்ளனர். உடனே பின்னால் சென்ற போலீசார் காரில் இருந்த 8 நபர்களை சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். விசாரணையில் சம்மந்த பட்ட 8 நபர்களும் நீதி வலை என்ற பத்திரிகையில் பணி புரிவதாக அடையாள அட்டை வைத்திருந்தனர். பிடிபட்டவர்கள் ஆன்டனி (51), சுனில் (33), லால் (36), செல்வராஜ் (37), சுரேஷ் பேபி (52), வெல்பின் ஜோஸ்(41), மணிகண்டன் (38), சகாய ஜாண் போஸ்கோ (58) என தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் இந்த கும்பல் குமரி மாவட்டத்தில் உள்ள பிரபல தொழிலதிபர்கள், நிறுவனங்களை மிரட்டி பணம் பறித்தது தெரிய வந்தது. இதையடுத்து புதுக்கடை போலீசார் 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story

