கோவை: தேர்வில் ஆள்மாராட்டம் செய்த 8 பேர் கைது !

கோவை: தேர்வில் ஆள்மாராட்டம் செய்த 8 பேர் கைது !
X
வன மரபியல் மற்றும் மரப்பெருக்க நிறுவனத்தின் தேர்வில் ஆள்மாராட்டம் செய்த வட இந்தியாவைச் சேர்ந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் டெக்னீசியன் பணிக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய 8 வடமாநில இளைஞர்களை கோவை போலீசார் நேற்று கைது செய்தனர். மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் IFGTB நிறுவனத்தில் டெக்னீசியன் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த மாதம் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெற்றது. எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று நேர்முகத் தேர்வு கோவையில் 4 மையங்களில் நடைபெற்றது. தேர்வு எழுத வந்தவர்களின் கைரேகைகள் ஒத்து போகாததால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரிஷிகுமார் (26), பிபன்குமார் (26), பிரசாந்த் சிங் (26), நரேந்திர குமார் (24), ராஜஸ்தானை சேர்ந்த லோகேஷ் மீனா (24), அசோக்குமார் மீனா (26), ஹரியானாவை சேர்ந்த சுப்ராம் (26) மற்றும் பீகாரை சேர்ந்த ராஜன் கார்காண்ட் (21) ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story