டாஸ்மாக் கடையை மூட முயற்சித்து சாலை மறியலில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் உட்பட 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

X
அரியலூர், மார்ச் 19- ஜெயங்கொண்டம் - அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது அரசுக்கு சொந்தமான நிறுவனத்தை மூட முயற்சித்தது உள்ளிட்ட வழக்குகளில் பாஜக மாவட்ட பெண் தலைவர் உள்பட எட்டு பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சொந்த ஜாமீன் விடுதலை செய்யப்பட்டனர். டாஸ்மாக்கில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது இதற்கு காரணமான சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மாநில பாஜக தலைவர் அண்ணாமலை முன்னாள் மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் இதனை கண்டித்து அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் பரமேஸ்வரி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பாஜக-வினர் ஊர்வலமாக சென்று போலீசாரின் தடுப்புகளை மீறி சென்று டாஸ்மாக் கடையை மூட முயற்சித்தனர். இதனை போலீசார் தடுத்த நிலையில் ஆத்திரமடைந்த பாஜகவினர் உடையார்பாளையம் சிலால் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து போலீசார் 50-க்கும் மேற்பட்ட பாஜகவினரை கைது செய்தனர். இந்நிலையில் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது அரசுக்கு சொந்தமான நிறுவனத்தை மூட முயற்சித்தது உள்ளிட்ட இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மாவட்ட தலைவர் டாக்டர் பரமேஸ்வரி, மாவட்ட பொருளாளர் சிவகுமார், ஒன்றிய தலைவர் பவன்குமார், மாவட்டத் துணைத் தலைவர் செந்தில்குமார், ஒன்றிய ஒன்றிய பொறுப்பாளர் சுரேஷ், முன்னாள் ஓபிசி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முருகன், மண்டல பொதுச்செயலாளர் ரஞ்சித், ஒன்றிய செயலாளர் ஆதிமூலம் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராஜசேகரன் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் டாக்டர் பரமேஸ்வரி உள்ளிட்ட எட்டு பேரையும் அவர்கள் சொந்த ஜாமினில் விடுவித்து தீர்ப்பளித்தார். இதில் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் ஐயப்பன்,அணைக்குடம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.
Next Story

