ஆம்பூர் அருகே அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவனை தேர்வு எழுதும் அட்டையால் தாக்கிய அறிவியல் ஆசிரியர்

ஆம்பூர் அருகே அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவனை தேர்வு எழுதும் அட்டையால் தாக்கிய அறிவியல் ஆசிரியர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவனை தேர்வு எழுதும் அட்டையால் தாக்கிய அறிவியல் ஆசிரியர் படுகாயங்களுடன் மாணவன் மருத்துவமனையில் அனுமதி.. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கரும்பூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் இவரது மகன் விஜயகுமார் அதே பகுதியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், மாணவன் விஜயகுமார் இன்று வகுப்பறையில் தேர்வு எழுதிக்கொண்டிருந்த போது, மற்றொரு மாணவனிடம் பேசியதாக பள்ளியில் பணியாற்றும் அறிவியல் ஆசிரியர் முருகதாஸ் என்பவர் விஜயகுமாரை தேர்வு எழுதும் அட்டையால் தலையில் தாக்கியுள்ளார், இதில் மாணவன் விஜயகுமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், உடனடியாக மாணவனை மீட்ட சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவனை ஆம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு மாணவனுக்கு 3 தையல்கள் போடப்பட்ட நிலையில், தற்போது மாணவன் நலமுடன் உள்ளார்.. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து உமராபாத் காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வரும் நிலையில், சக மாணவனுடன் பேசிய மாணவனை ஆசிரியர் தேர்வு எழுதும் அட்டையால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Next Story