ரவுடி கொலை வழக்கில் 8 பேர் கைது உள்ள

ரவுடி கொலை வழக்கில் 8 பேர் கைது உள்ள
X
மதுரையில் ரவுடி கொலை வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை தனக்கன்குளம் வெங்கலமூர்த்தி தெருவில் கடந்த 22ம் தேதி நள்ளிரவில் மதுரையின் பிரபல ரவுடி காளி என்ற கிளாமர் காளீஸ்வரன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் . இது தொடர்பாக மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின் பேரில் திருமங்கலம் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் மூன்று தனிப்படை அமைத்து குற்றவாளிகளை மதுரை ராமநாதபுரம் சிவகங்கை சென்னை உள்ளிட்ட இடங்களில் தேடி வந்தனர் . அதனை தொடர்ந்து காளி என்ற கிளாமர் கால கொலை வழக்கில் தனிப்படை போலீசார் எட்டு பேரை கைது செய்துள்ளனர். .1. பாலமுருகன் ( 26), தற்போது இடது கால் முறிவு ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவ மனையில் உள்ளார். மணல்மேடு . .2.முத்துகிருஷ்ணன் (18) மணல்மேடு நந்தகுமார் (20) கல்மேடு, ஜெயக்கொடி (67), க/பெ.சண்முகவேல் (வெள்ளைகாளி அம்மா ) காமராஜபுரம், 5.நவீன்குமார்(22) காமராஜர்புரம் 6.கார்த்தி(28) சென்னை கொளத்தூர் 7.அசேன் (32) திருப்பூர், 8.முத்து பாண்டி (வயது 34) மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் (சரண்டர்) ஆஜரான குள்ளா (எ) முத்துப்பாண்டி உள்ளிட்ட எட்டு பேரை இவ்வழக்கில் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
Next Story