கொடைக்கல்: ஷேர் ஆட்டோ கவிழ்ந்து 8 பெண்கள் காயம்

கொடைக்கல்: ஷேர் ஆட்டோ கவிழ்ந்து 8 பெண்கள் காயம்
X
ஷேர் ஆட்டோ கவிழ்ந்து 8 பெண்கள் காயம்
ராணிப்பேட்டை மாவட்டம் கொடைக்கல் கிராமத்தில் விவசாய கூலி வேலைக்கு ஷேர் ஆட்டோவில் எட்டு பெண் தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்தனர். கொடைக்கல் அருகில் செல்லும்போது சாலையின் குறுக்கே நாய் வந்ததால் அதன் மீது மோதாமல் இருக்க ஆட்டோவை திருப்பியபோது நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் 8 பெண்கள் காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இந்த விபத்துகளுக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story