வார இறுதி நாட்கள் தமிழ் புத்தாண்டு தொடர் விடுமுறை நீலகிரி மலைப்பாதையில் 8 ஆயிரம் வாகனங்கள் அணிவகுப்பு

வார இறுதி நாட்கள்  தமிழ் புத்தாண்டு தொடர் விடுமுறை  நீலகிரி  மலைப்பாதையில் 8 ஆயிரம் வாகனங்கள் அணிவகுப்பு
X
சுற்றுலா தலங்களில் குவிந்த கூட்டம்
வார இறுதி நாட்கள் தமிழ் புத்தாண்டு தொடர் விடுமுறை நீலகிரி மலைப்பாதையில் 8 ஆயிரம் வாகனங்கள் அணிவகுப்பு நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை அழகுடன் கூடிய சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்தநிலையில் வார விடுமுறை மற்றும் பள்ளிகளில் பொதுத்தேர்வு முடிந்து விட்டதால் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால், சுற்றுலா தலங்களில் நுழைவு டிக்கெட் பெறவும், படகு சவாரி செய்யவும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளதால், ஊட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கமர்சியல் சாலை, கலெக்டர் அலுவலக சாலை, பஸ் நிலையம், சேரிங்கிராஸ் மற்றும் ஊட்டி-குன்னூர் சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்தன வார விடுமுறை தமிழ்புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் மலைபாதைகளில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து சென்றன. நீலகிரியில் போக்குவரத்தை கட்டுப்படுத்த இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளதால், சோதனைக்கு பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில், வார இறுதி நாட்கள் என்பதாலும், தமிழ் புத்தாண்டு தொடர் விடுமுறை என்பதாலும் நீலகிரி மலைப்பாதையில் 8 ஆயிரம் வாகனங்கள் வரை சென்றன. மாவட்ட எல்லைகளில் வாகனங்கள் நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் சீசன் காலத்தில் கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும். மேலும் சீசன் காலங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். .
Next Story