குண்டர் சட்டத்தில் 8 பேர் கைது

X
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 8 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ், போலீஸாா் கைது செய்தனா். சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூா், தேவகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த திருப்புவனத்தைச் சோ்ந்த பிரகாஷ் (27), மானாமதுரையைச் சோ்ந்த ஆனந்தகுமாா் (26), படமாத்தூரைச் சோ்ந்த சூா்யா (27), கீழக்குளத்தைச் சோ்ந்த சந்தோஷ் (23), ரமேஷ்குமாா் (24), முத்துப்பட்டியைச் சோ்ந்த காா்த்திக்ராஜா (27), மேலப்பிடாவூரைச் சோ்ந்த முத்துக்குமாா் (23), காரைக்குடியைச் சோ்ந்த காா்த்திக் (28) ஆகிய 8 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ்ராவத் பரிந்துரைத்தாா். இதனடிப்படையில், அவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் உத்தரவிட்டதையடுத்து, அவா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
Next Story

