வெங்கமேட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 8-வது மாநாடு நடைபெற்றது.
வெங்கமேட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 8-வது மாநாடு நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு செங்குந்த நகர் கிழக்கு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இனாம் கரூர் வடக்கு நகர எட்டாவது மாநாடு நகர செயலாளர் லட்சுமி காந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிபிஐ மாநில செயற்குழு உறுப்பினர் ரவி கரூர் மாவட்ட செயலாளர் நாட்ராயன் துணை செயலாளர் சண்முகம் மற்றும் கலா ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை பதிவு செய்தனர். மாநாட்டின் நிறைவில் கரூர் மாநகராட்சி, வரிக்கு வட்டி விதிப்பதை கைவிட வேண்டும். அறிவித்த மக்கள் நலத்திட்டங்களை அமுல்படுத்த வேண்டும். மின் மயானத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும். தெருக்களில் சாலைகள் சீரமைக்க வேண்டும். தண்ணீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.
Next Story





