திருச்சி உள்பட 8 இடங்களில் வெயில் சதம்

திருச்சி உள்பட 8 இடங்களில் வெயில் சதம்
X
திருச்சி மாவட்டத்தில் 102.38 டிகிரி
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகு தியை ஒட்டிய மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. தற்போது, மழையின் அளவு குறைந்துள்ளது. அதன்படி, தமிழகத் தில் ஓரிரு இடங்களில் இன்று (ஞாயிற்றுகிழமை) லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தின் 8 இடங்களில் நேற்று வெயில் சதம் கண்டது. அதன் படி திருச்சி மாவட்டத்தில் 102.38 டிகிரி நேற்று பதிவானது. மேலும், தஞ்சாவூர் 102.2 டிகிரி, மதுரை நகரம் 101.84 டிகிரி, பரங்கிப்பேட்டை 101.66 நாகப்பட்டினம் 101.12 டிகிரி என பதிவானது மேலும் வெப்பநிலையை பொறுத்தவரையில், நாளை (திங்கட்கிழமை) வரை, அதிக வெப்பநிலையும், குறைந்த பட்ச வெப்பநிலையும் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Next Story