வாணியம்பாடி பல் மருத்துவமனையில் பழைய கருவிகளை நோயாளிகளுக்கு பயன்படுத்தியதால் 8 பேர் உயிரிழந்த விவகாரம்..

வாணியம்பாடி பல் மருத்துவமனையில் பழைய கருவிகளை நோயாளிகளுக்கு பயன்படுத்தியதால் 8 பேர் உயிரிழந்த விவகாரம்..
X
வாணியம்பாடி பல் மருத்துவமனையில் பழைய கருவிகளை நோயாளிகளுக்கு பயன்படுத்தியதால் 8 பேர் உயிரிழந்த விவகாரம்..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பல் மருத்துவமனையில் பழைய கருவிகளை நோயாளிகளுக்கு பயன்படுத்தியதால் 8 பேர் உயிரிழந்த விவகாரம்.. பல் மருத்துவமனையில் தமிழ்நாடு பல் மருத்துவ கவுன்சில் உண்மை அறியும் ஆய்வு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தனியார் பல் மருத்துவமனையில் கடந்த 2023 ஆம் ஆண்டு சிகிச்சை பெற்ற 8 பேர் அடுத்தடுத்த உயிரிழப்பு தமிழ்நாடு பொதுசுகாதாரம் மற்றும் வேலூர் சி.எம்.சி மருத்துவமனை நடத்திய ஆய்வில், ஒருமுறை பயன்படுத்திய கருவியே மீண்டும் நோயாளிகளுக்கு பயன்படுத்தியது ஆய்வில் தகவல் வெளியானதை தொடர்ந்து, கடந்த மே 30 ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஞான மீனாட்சி சிகிச்சை அளித்த பல் மருத்துவமனையில் ஆய்வு மேற்க்கொண்டு, பல் மருத்துவமனைக்கு வருவாய்துறை மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் பூட்டு போட்டு நடவடிக்கை மேற்க்கொண்டனர்.. அதனை தொடர்ந்து பல் மருத்துவமனையில் 8 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு பல் மருத்துவ குழுவினருக்கு அறிக்கை சமர்பித்து, அவர்கள் ஆய்வு செய்து உரிய விசாரணை முடித்த பின்னர் அறிக்கையை சமர்பிப்பதாக மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநர் ஞான மீனாட்சி அறிவித்திருந்த நிலையில், இன்று பல் மருத்துவமனையில் அப்பாதுரை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மற்றும், பேபிஜான் விநாயக மிஷன் பல் மருத்துவக்கல்லூரி, விஜய் பல் மருத்துவ பேராசிரியர் ஆகியோர் அடங்கிய தமிழ்நாடு பல் மருத்துவ கவுன்சில் உண்மை அறியும் ஆய்வு குழுவினர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஞானமீனாட்சி தலைமையிலான மருத்துவக்குழுவினர், வாணியம்பாடி வருவாய்துறையினர் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் பூட்டப்பட்ட பல் மருத்துவமனை திறந்து ஆய்வு மேற்க்கொண்டு பல் மருத்துவர் அறிவரசனிடம் விசாரணை மேற்க்கொண்டனர். அதனை தொடர்ந்து இதுகுறித்தான மருத்துவ அறிக்கை தமிழ்நாடு பல் மருத்துவக்குழுவினர் விசாரணை முடித்த பின்னர் தெரிவிப்பதாக திருப்பத்தூர் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் ஞான மீனாட்சி தெரிவித்தார்.. பேட்டி: ஞான மீனாட்சி - (திருப்பத்தூர் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர்)
Next Story