சதுரகிரி மலையடிவாரத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த 8 ஏக்கர் அரசு நிலம் மீட்பு .மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை நடவடிக்கை*

சதுரகிரி மலையடிவாரத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த 8 ஏக்கர் அரசு நிலம் மீட்பு .மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை நடவடிக்கை*
X
சதுரகிரி மலையடிவாரத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த 8 ஏக்கர் அரசு நிலம் மீட்பு .மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை நடவடிக்கை*
விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையடிவாரத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த 8 ஏக்கர் அரசு நிலம் மீட்பு .மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை நடவடிக்கை விருதுநகர் மாவட்டம் வத்திராயர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா ஜூலை 24-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அறநிலையத்துறை, வனத்துறை மதுரை, விருதுநகர் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. முன்னேற்பாட்டுப் பணிகளை நேற்று மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் காவல் கண்காணிப்பாளர் கண்ணன், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தற்காலிக பேருந்து நிறுத்தம், வாகன காப்பகம், சுகாதார வளாகம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். தாணிப்பாறை அடிவாரத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலம் 6 ஏக்கர் மீட்கப்பட்டு, தற்காலிக பேருந்து நிறுத்தமாகவும்,வாகன நிறுத்தும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதே பகுதியில் மேலும் 8 ஏக்கர் அரசு நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து வருவதை அறிந்த மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, ஆக்கிரமிப்பு நிலத்தை உடனடியாக மீட்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் இன்று வட்டாட்சியர் ஆண்டாள் தலைமையில் வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 8 ஏக்கர் நிலத்தை மீட்டனர். அப்பகுதியில் வேலி அமைத்து, எதிர்காலத்தில் சதுரகிரி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த அந்த இடம் பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்..
Next Story