வால்பாறையில் சிறுத்தை தாக்கி 8 வயது சிறுவன் பலி !

X
கோவை மாவட்டம் வால்பாறை அருகே, வடமாநில தொழிலாளியின் மகன் நூர் இஸ்லாம் (8) மீது சிறுத்தை தாக்கி கொன்றது. வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை சிறுத்தை கவ்விச் சென்றது. பின்னர் புதரில் சடலமாக கண்டெடுக்கப்பட்டான். சில மாதங்களில் வால்பாறையில் நடந்த சிறுத்தை தாக்குதல்களில் இது நான்காவது உயிரிழப்பு. அண்மையில் 7 வயது சிறுமியும் இதேபோல் உயிரிழந்திருந்தது. தொடர்ச்சியான தாக்குதலால் உள்ளூர் மக்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
Next Story

