வால்பாறை மலைப்பகுதியில் பரிதாபம் – முதியவரை 8 கி.மீ தொட்டிலில் சுமந்து சென்ற கிராம மக்கள் !

X
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள உடும்பன் பாறை மலை கிராமத்தில் வசித்துவரும் முதியவர் ஒருவர் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அப்பகுதியில் சாலை வசதி இல்லாததால், கிராம மக்கள் தொட்டில் கட்டி சுமார் 8 கிலோமீட்டர் தூரம் நடந்து நல்லமுடி பூஞ்சோலை வரை சுமந்து சென்று அங்கிருந்து வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பலமுறை கோரிக்கை விடுத்தும் சாலை வசதி ஏற்படுத்தப்படாததால், உயிரிழப்பு ஏற்படும் முன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.
Next Story

