போச்சம்பள்ளியில் ரூ.8 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம் தோறும் இ-நாம் முறையில் கொப்பரை தேங்காய் ஏலம் நடை பெற்றது. இதில் 4,342 கிலோ கொப்பரை தேங்காய்கள் வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.227.90-க்கும், குறைந்தபட்சம் ரூ.83.19-க்கும், சராசரியாக கிலோ ஒன்று ரூ.220-க்கும் விற்பனையானது. அதன்படி ரூ.8 லட்சத்து 81 ஆயிரத்து 680-க்கு விற்பனையானது. இதன் மூலம் 54 விவசாயிகள் பயன்பெற்றனர்.
Next Story

