அக். 8ல் இடமாற்றம் செய்து இ.பி.எஸ். பிரச்சார கூட்டம் நடத்த ஏற்பாடுகள் தீவிரம்

Komarapalayam King 24x7 |4 Oct 2025 9:41 PM ISTகுமாரபாளையத்தில் அக். 8ல் இடமாற்றம் செய்து இ.பி.எஸ். பிரச்சார கூட்டம் நடத்த ஏற்பாடுகள் தீவிரம்
குமாரபாளையம் பகுதியில் நடைபெறவிருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் நிகழ்ச்சி பாதுகாப்பு காரணங்களுக்காக தேதி மற்றும் இடம் மாற்றம் செய்யபட்டுள்ளது. குமாரபாளையம் ராஜம் தியேட்டர் பகுதியில் இன்று மாலை ஏழு மணி அளவில் முன்னாள் தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி.பழனிச்சாமியின் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்.என்ற தலைப்பில் வாகன பிரச்சாரம் நடைபெறுவதாக இருந்தது. கரூரில் நடந்த சம்பவங்களை அடுத்து போதிய பாதுகாப்பு இல்லையென நாமக்கல் மாவட்ட காவல்துறை அறிவித்ததன் பேரில், எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மீண்டும் வருகின்ற புதன்கிழமை அக். 8ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேடை அமைத்து பரப்புரை நடத்த அனுமதி வழங்கப்படும் என போலீசார் தெரிவித்ததின் பேரில், குமாரபாளையம் பள்ளிபாளையம் சாலையில் உள்ள சாணார்பாளையம் பகுதியில் கூட்டம் நடத்த அ.தி.மு.க. சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது. அப்பகுதியினை நேற்று மாவட்ட போலீஸ் எஸ்.பி. விமலா நேரில் ஆய்வு செய்தார்.
Next Story
