அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில், 8 ஆம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார விழா
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில், சூரசம்ஹார விழா அறக்கட்டளை மற்றும் குடிப்பாட்டுக்காரர்கள், ஊர் பொதுமக்கள் சார்பில், 8 ஆம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார விழாயொட்டி இன்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து முகூர்த்த கால் நடப்பட்டது. அக்டோபர் 21 ஆம் தேதி மாலை 6 மணியளவில் மலையிலிருந்து ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேதா சுப்பிரமணிய சுவாமி கீழே எழுந்தருளல், 26 ஆம் தேதி மாலை, 3 மணிக்கு மேல் வீரபாகு துாது நிகழ்வு நடைபெறுகிறது. 27 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு முருகப்பெருமான் அன்னையிடம் சக்திவேல் வாங்குதல் நிகழ்வு, கஜமுகா சூரன் ,சிங்கமுகாசூரன், பானு கோபன், சூரபத்மன் சம்ஹார பெருவிழா நடைபெறுகிறது. தொடர்ந்து வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இறுதியாக 28 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் மற்றும் விருந்தும் நடைபெறுகிறது. விழா குழுவினர், குடிப்பாட்டுக்காரர்கள், ஊர் பொதுமக்கள், கோவில் நிர்வாக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story



