நாமக்கல்லில் மாநில அளவிலான சிலம்பம் போட்டிகள் – பிப்ரவரி 8ல் நடைபெறுகிறது! பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு அழைப்பு

X
Namakkal King 24x7 |4 Feb 2026 8:10 PM ISTபள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான சிலம்பம் போட்டிகள் வருகிற பிப்ரவரி 8ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாமக்கல்லில் நடைபெற உள்ளது.
நாமக்கல் சிலம்பம் அடிமுறை கலைக்கூடம் சங்கம் சார்பில், யூனிடேடு ரிலீஜியஸ் இனிசியேடிவ் (URI), பந்தம் பவுண்டேஷன், நாமக்கல் மற்றும் பாரத மாதா சிலம்பம் பயிற்சி மன்றம் ஆகியவை இணைந்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான சிலம்பம் போட்டிகள் வருகிற பிப்ரவரி 8ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.இந்த போட்டிகள் நாமக்கல் திருச்சி ரோட்டில் அமைந்துள்ள தி ஸ்பெக்ட்ரம் அகாடமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது. போட்டிகளில் ஒற்றைகம்பு, இரட்டைகம்பு மற்றும் சுருள் வாள் ஆகிய பிரிவுகளில் மாணவ,மாணவியர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.5 வயது முதல் 21 வயது வரை உள்ள மாணவ, மாணவியர்கள் இப்போட்டிகளில் பங்கேற்கலாம். வயது அடிப்படையில் 5, 6, 7–8, 9–10, 11–12, 13–14, 15, 16–17, 18, 19–20 மற்றும் 21 என தனித்தனி பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கூடுதல் தகவல்களுக்கு 99652 08633, 94984 18633, 90957 98836 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story
