பூட்டிய வீட்டில் 8 பவுன் நகை திருடிய வழக்கில் 2 பேர் கைது

X
பொன்னமராவதியில் பூட்டிய வீட்டில் பூட்டை உடைத்து 8பவுன் நகை மற் றும் ரூ.20,000 பணம் திருடிய வழக்கில் 2 பேரை போலீ சார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட் டம், பொன்னமராவதி நேரு நகரைச் சேர்ந்த சீனிவாச பெருமாள் என்பவர் கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர்சென் றிருந்தார். இந்நிலையில் அவ ரது வீட்டில் மர்மநபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 8 பவுன் தங்க நகை மற்றும் ரூ.20. ரூ.20 ஆயிரத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்து பொன்னம ராவதி போலீசில் அளிக் கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் திருட்டு சம் பவ இடத்தில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட் டம் தெற்கு தாமரைக்கு ளத்தைச் சேர்ந்த சுதிர் (28) மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த ரமேஷ்(42) ஆகி யோரை கடந்த 30ம் தேதி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story

