மழையால் ரெயில் ரத்து செய்யப்பட்டு டிக்கெட் கட்டணத்தை திரும்ப வழங்காததற்கு ரூ.8, 458 இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவு

மழையால் ரெயில் ரத்து செய்யப்பட்டு டிக்கெட் கட்டணத்தை திரும்ப வழங்காததற்கு ரூ.8, 458 இழப்பீடு வழங்க  மாவட்ட  நுகர்வோர் நீதிமன்றம் ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவு
X
மழையால் ரெயில் ரத்து செய்யப்பட்டு டிக்கெட் கட்டணத்தை திரும்ப வழங்காததற்கு ரூ.8, 458 இழப்பீடு வழங்க விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் நீதிமன்றம் ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவு..*
மழையால் ரெயில் ரத்து செய்யப்பட்டு டிக்கெட் கட்டணத்தை திரும்ப வழங்காததற்கு ரூ.8, 458 இழப்பீடு வழங்க விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் நீதிமன்றம் ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவு.. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்தவர் வைகுண்ட மூர்த்தி. இவர் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி சென்னை செல்வதற்கு கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தட்கல் டிக்கெட் எடுத்து இருந்தார். இந்நிலையில் மழை காரணமாக அந்த ரெயில் ரத்து செய்யப்பட்டது. ரத்து செய்யப்பட்ட ரெயிலில் பயணம் செய்ய இருந்த வர்களுக்கு டிக்கெட் கட்டணம் திரும்ப வழங்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது. ஆனால் வைகுண்ட மூர்த்திக்கு டிக்கெட் தொகை திரும்ப வரவில்லை. எனவே ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், சேவை குறைபாட்டுக்கு இழப்பீடு கோரி அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி சக்கரவர்த்தி. உறுப்பினர் வைகுண்ட மூர்த்திக்கு டிக்கெட் தொகை ரூ.458, இழப்பீடு ரூ.5,000, வழக்கு செலவு தொகை ரூ.3,000 என மொத்தம் ரூ.8,458-யை தெற்கு ரெயில்வே நிர்வாகம் மற்றும் இந்திய ரெயில்வே ஆணையம் வழங்க உத்தரவிட்டார்.
Next Story