கரூரில் தொழில் அதிபரை கடத்த முயன்ற 8பேர் 5- மாதத்திற்கு பிறகு கைது.
கரூரில் தொழில் அதிபரை கடத்த முயன்ற 8பேர் 5- மாதத்திற்கு பிறகு கைது. கரூர் செங்குந்தபுரத்தை சேர்ந்தவர் ராஜா பழனிசாமி வயது 78. பால் பண்ணை நடத்தி வருகிறார். இவரை கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி அதிகாலை நடை பயிற்சிக்கு சென்றபோது மர்ம நபர்கள் இவரை காரில் கடத்த முயன்றனர். அப்போது தப்பி ஓடிய ராஜா பழனிசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் படி விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் கடத்தல்காரர்கள் கன்னியாகுமரியில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கன்னியாகுமரிக்கு சென்று பகவதி நாராயணன் ராஜா வயது 24 , மாரிமுத்து 30, விக்னேஸ்வரன் 19 , முத்துக்குமார் 19 , சுரேஷ் 19 மற்றும் 18 வயது சிறுவர்கள் 3 பேர் என 8பேரை கரூர் காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர். இதில் பகவதி நாராயணன் ராஜா கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜா பழனிச்சாமி பால் பண்ணையில் வேலை பார்த்தவர் என்பது தெரியவந்தது. ராஜா பழனிச்சாமியிடம் பணம் பறிக்கும் நோக்கத்தோடு அவரை கடத்த முயன்றனர் என்பதும் தெரியவந்தது. 8- பேரையும் கரூர் ஜே எம் 1 நீதிமன்றத்தில் நீதிபதி சார்லஸ் ஆல்பர்ட் முன்பு ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story





