ராமநாதபுரம் 80 கிலோ கஞ்சா பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை சூடை வலைக்குச்சி மீனவ கிராமம் அருகே நடுக்கடலில் சுங்கத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சந்தேகத்துக்கிடமான முறையில் பதிவு எண் இல்லாத நாட்டுப்படகு கடலில் சென்றதை மடக்கி பிடிக்க முயன்ற போது படகில் இருந்த மர்ம நபர் கடலில் குதித்து தப்பினர். பின்னர் அந்த நாட்டுப்படகை சோதனை செய்தபோது படகில் ஐந்து மூட்டைகளில் இலங்கைக்கு கடத்துவதற்காக 80 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து நாட்டுப்படகுடன் கஞ்சாவை பறிமுதல் செய்த மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகள் ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.12 லட்சம் இருக்கலாம் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Next Story




