திருப்பத்தூர் அருகே 80 அடி ஆழ்முள்ள கிணற்றில் விழுந்த மான்.

X

திருப்பத்தூர் அருகே 80 அடி ஆழ்முள்ள கிணற்றில் விழுந்த மான். தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே 80 அடி ஆழ்முள்ள கிணற்றில் விழுந்த மான். தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஏலகிரி வனப்பகுதியில் இருந்து ஒரு மான் வேட்டபட்டு அருகே உள்ள சொக்கலாம்பட்டி கிராமத்திற்க்குள் உணவு தேடி வந்துள்ளது.அப்போது அதே பகுதியில் உள்ள கோபால்வட்டம் என்ற இடத்தில் உள்ள சென்றயான் என்பவரின் விவசாய கிணற்றில் தவறி விழுந்தது.இது குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த நாட்டரம்பள்ளி தீயணைப்பு துறையினர் கிணற்றில் விழுந்த அந்த மானை உயிருடன் பாதுகாப்பாக மீட்டு திருப்பத்தூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். திருப்பத்தூர் வனசரக அலுவலர் சோலைராஜன் தலைமையிலான வனத்துறையினர் அந்த மானை பாதுகாப்பாக எடுத்து சென்று நாட்டரம்பள்ளி அருகே உள்ள நந்திபெண்டா வனப்பகுதியில் விட்டனர். அப்போது அந்த மான் உற்சாகமாக துள்ளி குதித்து ஓடியது.
Next Story