ஒரு லட்சத்து 80 ஆயிரம் கால்நடைகள் பயனடையும் வகையில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்*

X

ஒரு லட்சத்து 80 ஆயிரம் கால்நடைகள் பயனடையும் வகையில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்*
ஒரு லட்சத்து 80 ஆயிரம் கால்நடைகள் பயனடையும் வகையில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார் விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் கூரைக்குண்டு கிராமத்தில்2025-26 ஆம் ஆண்டிற்கான முதல் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் எட்வின் ஜேம்ஸ் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.இந்த முகாமில் கால்நடைகளுக்கு குடற்புழுநீக்கம், ஆண்மைநீக்கம், மலடுநீக்க சிகிச்சை, தடுப்பூசிப்பணி, KCC விண்ணப்பங்கள் பெறுதல் ஆகிய பணிகள் நடைபெற்றன. இம்முகாமில் விவசாயிகளுக்கு தாது உப்பு மற்றும் தீவண கருணைகளை ஆட்சியர் வழங்கினார்.மேலும் கிடரி கன்றுகளை சிறந்த முறையில் வளர்த்த 3 விவசாயிகளுக்கு சிறப்பு பரிசும் சிறந்த கால்நடை மேலாண்மைக்காக 3 விவசாயிகளுக்கு சிறப்பு பரிசை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், விருதுநகர் மாவட்டத்தில் நடப்பாண்டில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் 12 முகாம்கள் வீதம் மொத்தம் 132 சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும் என்றும் இதன்மூலம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கால்நடைகள் பயனடையும் எனவும் தெரிவித்தார்.
Next Story