சேலம் கொண்டலாம்பட்டியில் சேலை வியாபாரியிடம் ரூ.80 ஆயிரம் திருட்டு

X
சேலம் அம்மாபேட்டை தியாகி நடேசன் தெருவை சேர்ந்தவர் கோபால் (வயது 65). சேலை வியாபாரியாக இருந்து வரும் இவர் கொண்டலாம்பட்டி பகுதியில் சேலைகளை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று மதியம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே உள்ள ஒரு வங்கியில் இருந்து அவரது கணக்கில் உள்ள ரூ.80 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு வங்கியை விட்டு வெளியில் வந்தார். பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது மொபட்டில் உள்ள டிக்கியில் வைத்துவிட்டு வண்டியை எடுப்பதற்கு முற்பட்டபோது அவர் மீது ஏதோ ஒரு மூலிகை பொடி தூவியதும் கோபாலுக்கு உடல் முழுவதும் அலர்ஜியால் அரிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கோபால் அருகே இருந்த ஒரு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் வந்து வண்டியின் டிக்கியை பார்த்தபோது டிக்கியில் வைக்கப்பட்டிருந்த ரூ.80 ஆயிரம் மாயமாகி விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோபால் கொண்டலாம்பட்டி உள்ள குற்றப்பிரிவு போலீசில் புகார் தெரிவித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வண்டியில் பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story

