பொய்கை மாட்டு சந்தையில் 80 லட்சம் வர்த்தகம்!

X
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும் மாட்டுச்சந்தையில், இன்று ஒரே நாளில் ரூ.80 லட்சம் வரை வர்த்தகம் நடந்தது. உள்ளூர் விவசாயிகள் மட்டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மற்றும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டதால், சந்தை களைகட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story

