பொதுப்பணித்துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.80 லட்சம் மோசடி

X
திண்டுக்கல் வேடப்பட்டி அபிராமிநகரை சேர்ந்த செந்தில்குமார்(35), மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த குமரேசன், அசோக், செல்வராஜ், மூர்த்தி, முத்துப்பாண்டி, சுதாகர் ஆகிய 7 பேரிடம் பொதுப்பணித்துறையில் வேலை வாங்கித்தருவதாகவும் ஆசைவார்த்தை கூறி ரூ.80 லட்சத்து 5 ஆயிரம் மோசடி செய்த திண்டுக்கல் மேட்டுப்பட்டி சேர்ந்த சரவணன் என்பவர் மீது மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி குமரேசன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் வடமதுரையை சேர்ந்த வீரப்பனிடம் ரூ.24 லட்சம் மோசடி செய்த வழக்கில் சரவணனை வடமதுரை போலீசாரால் கைது செய்து சிறையில் அடைத்தனர் இதனைத் தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் திண்டுக்கல் சிறையில் உள்ள சரவணனை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

