கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் குற்ற விவாதிப்பு கூட்டம் – சிறப்பாக பணியாற்றிய 80 போலீசாருக்கு பாராட்டு !
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கடந்த மாதத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, போதைப் பொருள் விற்பனை உள்ளிட்ட வழக்குகளில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து, நீதிமன்றத்தில் தண்டனை பெற்று தரும் பணியில் சிறந்து விளங்கிய காவல் ஆய்வாளர்கள் 9 பேர், உதவி ஆய்வாளர்கள் 15 பேர், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 8 பேர், தலைமை காவலர்கள் 15 பேர், முதல் நிலைக் காவலர்கள் 5 பேர், காவலர்கள் 28 பேர் என மொத்தம் 80 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். மேலும், போதைப் பொருள் விற்பனையாளர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார்.
Next Story



