ராசிபுரம் அருகே 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்...

ராசிபுரம் அருகே 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்...
X
ராசிபுரம் அருகே 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பழந்தின்னிபட்டி பகுதியை சேர்ந்தவர் சாந்தி(57)இவர் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வைத்து வளர்த்து வரும் நிலையில் மேய்ச்சலுக்காக அருகாமையில் உள்ள வயல்வெளி பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் உள்ள சுமார் 80 அடி ஆழ கிணற்றில் ஆடு ஒன்று தவறி விழுந்ததாக ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி பொதுமக்களின் உதவி உடன் சாந்தி தகவல் அளித்தார். தகவலின் பெயரில் விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் 80 அடி ஆழ கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆட்டை விரைந்து செயல்பட்டு உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்..
Next Story