பி.சிதம்பரம் 80ஆவது பிறந்த நாள்: சிறப்பு பூஜை, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் !

கோவையில் பி.சிதம்பரம் பிறந்த நாள் விழா: சிறப்பு பூஜை, மாற்றுத்திறனாளிகளுக்கு சைக்கிள் உதவி வழங்கப்பட்டது.
அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைமையில், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சாரதாம்பாள் ஆலயத்தில் முன்னாள் மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சர், காங்கிரஸ் மூத்த தலைவர் பி. சிதம்பரம் அவர்களின் 80ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்காக சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பெருமளவிலான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story