ராசிபுரம் அருகே பிலிப்பாக்குட்டைப் பகுதியில், 80 ஆண்டாக பயன்படுத்தும் பாதையை ஆக்கிரமைத்துள்ளதை அகற்றக்கோரி ஆடு, மாடுகளுடன் வந்து ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை..

X
Rasipuram King 24x7 |18 Dec 2025 6:53 PM ISTராசிபுரம் அருகே பிலிப்பாக்குட்டைப் பகுதியில், 80 ஆண்டாக பயன்படுத்தும் பாதையை ஆக்கிரமைத்துள்ளதை அகற்றக்கோரி ஆடு, மாடுகளுடன் வந்து ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பிலிப்பாங்குட்டை பகுதியில் இருந்து கணவாய்ப்பட்டி செல்லும் வலையில் காட்டுக்கொட்டாய் பகுதியில் 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பொது பாதியை சுமார் 80 ஆண்டுகளாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்ற தனிநபர் ஒருவர் கம்பி வேலி அமைப்பதற்காக பாதையை சேதப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விவசாய கூலி ஆட்கள் தங்களது ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல முடியாமலும், பாதை ஆக்கிரமிப்பால் நடக்க முடியாமலும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த ஐந்துக்கு மேற்பட்டவர்கள் மினி ஆட்டோவில் ஆடு, மாடுகள் மற்றும் விறகுகளை ஏற்றிக்கொண்டு ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் தாசில்தார் சசிகுமார் மற்றும் ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர். இதனால் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
