கல்வராயன் மலைப்பகுதியில் 800 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு
Thirukoilure King 24x7 |30 Sep 2024 6:47 PM GMT
அழிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி, கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கல்வராயன்மலை மற்றும் அதனை சுற்றியுள்ள மலைகிராமங்களில் காவல் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 2 சிறப்பு படைகள் அமைத்து கல்வராயன் மலை முழுவதும் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் மூலப்பொருட்கள் , சாராய ஊரல்களை அழிப்பது, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்வது போன்ற அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஞாயிற்றுக்கிழமை காவல் உதவி ஆய்வாளர்கள் மணிபாரதி மற்றும் மணிகண்டன் ஆகியோர்கள் தலைமையில் கல்வராயன்மலை முழுவதும் மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்ட போது அருவங்காடு மேற்கு மலை அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 4 பேரல்களில் சுமார் 800 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. இக்குற்ற செயலில் ஈடுபட்ட அருவங்காடு கிராமத்தைச் சேர்ந்த ராமன் மகன் அண்ணாமலை(25) கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Next Story