ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மாருதி 800 கார் நடுரோட்டில் தீப்பிடித்து எறிந்ததால் பரபரப்பு..*
Virudhunagar King 24x7 |23 Dec 2024 3:36 PM GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மாருதி 800 கார் நடுரோட்டில் தீப்பிடித்து எறிந்ததால் பரபரப்பு..*
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மாருதி 800 கார் நடுரோட்டில் தீப்பிடித்து எறிந்ததால் பரபரப்பு.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மூவரை வென்றான் விளக்கு அருகில் சாலையில் சென்று கொண்டிருந்த மாருதி 800 கார் திடீரென தீ பிடித்து எறிந்தது. அதிர்ஷ்டவசமாக கணவர்,மனைவி உயிர் தப்பினர்.. திருப்பூர் மாவட்டம் பொல்லி காலனிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் மலர்விழி தம்பதியினர் இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து விட்டு பின்னர் திருப்பூர் சென்று கொண்டிருந்தபோது ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மூவரை வென்றான் விளக்கு அருகே போகும் போது காரில் பெட்ரோல் காலியாகியுள்ளது உடனடியாக ஆனந்தகுமார் அருகில் இருந்த பெட்ரோல் பங்க் சென்று கேனில் பெட்ரோல் வாங்கி வந்து காரில் ஊற்றி உள்ளார். பின்னர் சிறிது நேரம் சென்ற போது திடீரென காரில் புகை வந்ததால் உடனடியாக ஆனந்தகுமார் மற்றும் மனைவி மலர்விழி இருவரும் காரில் இருந்து இறங்கி உள்ளனர்.பின்னர் திடீரென கார் மடமடவென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைஅடுத்து சாலையில் காரில் சென்று கொண்டிருந்தவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த காரின் தீயை தீயணைப்புத் துறையினர் அணைத்தனர். ஆனால் கார் முற்றிலும் தீயில் எரிந்து கருகியது. அதிர்ஷ்டவசமாக கணவர் மனைவி உயிர் தப்பினர்.மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நடு ரோட்டில் மாருதி 800 கார் தீப்பிடித்து எறிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இச்சம்பவம் குறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story