ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்னிந்தியா அளவிலான நடைபெற்ற கராத்தே போட்டியில் 800க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பங்கேற்பு....*

X
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்னிந்தியா அளவிலான நடைபெற்ற கராத்தே போட்டியில் 800க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பங்கேற்பு.... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலகளிருந்து 800க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் இன்று தென்னிந்திய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இப் போட்டியில் தனிநபர் மற்றும் குழு உள்ளிட்ட 40 பிரிவுகளின் கீழ் பல்வேறு வகையான கராத்தே போட்டிகள் நடத்தப்பட்டன. இன்றைய போட்டியை ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா துவக்கி வைத்த நிலையில் பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் சிபிஎஸ்இ பள்ளிகளின் பிரிவில் ஸ்ரீவில்லிபுத்தூர் லிங்கா குளோபல் பள்ளியும் மெட்ரிக் பள்ளிகளின் பிரிவில் சிவகாசி விநாயகா பள்ளியும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பரிசினை தட்டிச் சென்றனர். மேலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் கேரளா மற்றும் ஆந்திரா பள்ளி மாணவ மாணவிகள் வெற்றி பெற்றனர் இப்போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ- மாணவிகள் சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றவர்களாவார்கள் என போட்டியின் ஒருங்கிணைப்பாளர் செபாஸ்டியன் தெரிவித்துள்ளார்.
Next Story

