ரத்தன் டாடாவை கெளரவிக்கும் வகையில் 800 மாணவ மாணவிகள் உலக சாதனை

ரத்தன் டாடாவை கெளரவிக்கும் வகையில் 800 மாணவ மாணவிகள் உலக சாதனை
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டை பகுதியில் அமைந்துள்ள வேலம்மாள் பள்ளியில் தொழில் அதிபர் ரத்தன் டாடாவை கெளரவிக்கும் வகையில் 800 மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து அவர் உருவத்தை வரைந்தது போல் நின்று உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர் திருவள்ளுர் மாவட்டம் செவ்வாப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள வேலம்மாள் வித்யசாரம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா அவர்களை கௌரவிக்கும் வகையில் பள்ளியின் தாளாளர் சுடலை முத்துப்பாண்டியன் அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டில் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு ரத்னா டாட்டாஅவர் பிறந்து வளர்ந்து தொழிலில் சாதனை அடைந்த வரலாறு தொடர்பாக ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மத்தியில் உரையாற்றினார்கள், பின்பு அவரை கௌரவிக்கும் வகையில் பள்ளி வளாக மைதானத்தில் 800 மாணவ மாணவிகள் 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ஒன்றிணைந்து அவர் உருவத்தை வரைந்து போல் நின்று இண்டர் நேஷனல் வேர்ல்ட் ரெக்கார்டுஇடம் பிடித்து அசத்தினர் பின்பு IWR இன்டர்நேஷனல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை பதிவு செய்தசான்றிதழை லயன் அம்பாசிட்டர் டாக்டர் செந்தில் அரசு அவர்கள் பள்ளி தாளாளர் அவர்களிடம் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்களும் மாணவ மாணவிகளும் 800க்கும் மேற்பட்டோர்கலந்து கொண்டனர்
Next Story