மருத்துவ குணம் நிறைந்த கழுதை பால் ஒரு லிட்டர் 8000 ரூபாய்

X
குழந்தைகளுக்கு பல்வேறு நோய் எதிர்ப்பு சக்தியாக விளங்கி வரும் மருத்துவ குணம் கொண்ட கழுதை பால் விற்பனை தற்பொழுது திண்டுக்கல்லில் படு ஜோராக நடைபெற்று வருகிறது. முந்தைய காலங்களில் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை, உடல் சோர்வு, காயம், சொரி சிரங்கு, அதிக பசி எடுக்க என பல்வேறு பிரச்சனைகளுக்கு மருந்தாக விளங்கி வருவது கழுதை பாலாகும். இதனையே நம்முடைய முன்னோர்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி வழங்கி வந்தனர். தற்பொழுது தொழில்நுட்ப வளர்ச்சியால் கழுதை இனம் என்பது அழிவை நோக்கி சென்று வருகிறது. இதனிடையே திண்டுக்கல் பில்லம நாயக்கன்பட்டி பகுதியில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் ஐந்து குடும்பங்களைச் சார்ந்த கழுதை பால் விற்பனை செய்யும் நபர்கள் தங்கியுள்ளனர். இவர்கள் தினசரி காலை நேரங்களில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று கழுதை பால் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர் அந்த வகையில் ஒரு சங்கு கழுதை பால் 100 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் கழுதை பால் 8000 ரூபாய் வரையிலும் விற்பனை செய்து வருகின்றனர். நாளொன்றுக்கு ஒரு கழுதை அரை லிட்டர் பால் கறப்பதாக தெரிவிக்கும் வியாபாரிகள் தற்பொழுது கழுதைகள் கிடைக்காதன் காரணமாக ஒரு கழுதை 60 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல்.
Next Story

