காஞ்சிபுரத்தில் மளிகை கடையில் ரூ.80,000 திருட்டு

X

காஞ்சிபுரம் மளிகை கடையில் பணம் திரட்டு போலீசார் விசாரணை
காஞ்சிபுரம் அடுத்த ஆரியபெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் அய்யனார், 28. இவர், காஞ்சிபுரம் சாலை தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர், வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை 8:30 மணிக்கு அய்யனார் வந்து பார்த்தபோது, ஷட்டரில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு, திறந்த நிலையில் இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் கலைந்து கிடந்தது. மேலும், கடையில் இருந்த 80,000 ரூபாய் மர்மநபர்களால் திருடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
Next Story