விழுப்புரத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 808 கோரிக்கை மனுக்கள்
Villuppuram King 24x7 |20 Aug 2024 4:48 AM GMT
மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனுக்கள்
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனே கவனம் செலுத்தி உரிய காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இதில், முதியோர் உதவிதொகை, வீட்டு மனை பட்டா கோருதல், பட்டா மாறுதல், முதல்வரின் பசுமை வீடு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் கொண்ட 808 மனுக்கள் பெறப்பட்டது.தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 11 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25,780 மதிப்பீட்டில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது. மாவட்ட பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், 5 பேருக்கு ரூ.26,340 மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரம், சலவை பெட்டிகள் மற்றும் 5 பேருக்கு கிறிஸ்தவ நலவாரிய உறுப்பினர் அட்டைகளை மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் வசந்த், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி ஆகியோர் வழங்கினர். இதில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சிவக்கொழுந்து, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முகுந்தன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story