ரூபாய் 8.08 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட - துவக்கி வைத்தால் செந்தில் பாலாஜி

ரூபாய் 8.08 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட - துவக்கி வைத்தால் செந்தில் பாலாஜி
கரூரில் அடிப்படை வசதி பணிகளுக்கான பூமி பூஜையில் பங்கேற்ற செந்தில் பாலாஜி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் அமைக்கும் பணிக்கான துவக்க விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. ரூபாய் 8.08 கோடி மதிப்பில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வஞ்சியம்மன் கோவில் தெரு, பசுபதிபாளையம், அருணாச்சலம் நகர், ராமானுர், மரியம் டீச்சர் லைன் உள்ளிட்ட பகுதிகளில் தார் சாலை அமைத்தல், மழைநீர் வடிகால் சீரமைத்தல், பேவர் பிளாக் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான பணியை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் , துணை மேயர் சரவணன் , மண்டல தலைவர்கள் கனகராஜ்,கோல்டு ஸ்பாட் ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story