கோவையில் ராஜீவ் காந்தி 81-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் !
கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான காமராஜர் பவனில் முன்னாள் பிரதமர், பாரத் ரத்னா ராஜீவ் காந்தியின் 81-ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமையில், ராஜீவ் காந்தியின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்டத் தலைவர் வக்கீல் கருப்புசாமி, மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சுதன், மகளிர் காங்கிரஸ் மற்றும் வர்த்தக பிரிவு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். பிறகு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
Next Story



