கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.81.41 லட்சம் வர்த்தகம்

X

வர்த்தகம்
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 81.41 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு 1,000 மூட்டை உளுந்து, 300 மூட்டை மக்காச்சோளம், 60 மூட்டை வரகு, 30 மூட்டை எள் 10, தலா 5 மூட்டை மணிலா, தட்டைப்பயிர், பச்சைப்பயிர் என 1,403 மூட்டை விளை பொருட்களை விவசாயிகள் கொண்டு வந்தனர்.ஒரு மூட்டை உளுந்து 7,759 ரூபாய்க்கும், மக்காச்சோளம் 2,310, வரகு 1,954, கம்பு 2,646, எள் 13,261, மணிலா 5,836, தட்டைப்பயிர் 7,399, பச்சைப்பயிர் 7,699 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் மொத்தமாக 81 லட்சத்து 41 ஆயிரத்து 625 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் மக்காச்சோளம் 110, உளுந்து 3, வரகு 1 மூட்டைகள் என மொத்தம் 114 மூட்டை விளை பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,237 ரூபாய்க்கும், உளுந்து 7,209, வரகு 2,061 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக 2 லட்சத்து 73 ஆயிரத்து 768 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
Next Story