வெள்ளகோவில் நகைக்கடையில் ரூ.82 ஆயிரம் மோசடி செய்தவர் கைது

X

வெள்ளகோவில் நகைக்கடையில் ரூ.82 ஆயிரம் மோசடி செய்தவரை வெள்ளகோவில் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானப்பிரகாசம் முத்தூர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது முத்தூர் பஸ் நிலையம் அருகில் சந்தேகத்துக்கிடமான வகையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண் டார். இதில் அவர் கடந்த மாதம் 15-ந்தேதி வெள்ளகோவில் முத்தூர் பிரிவு நான்கு சாலை சந்திப்பு அருகில் உள்ள ஒரு நகைக்கடையில் ரூ.82 ஆயிரத்துக்கு தங்கக் காசு மற்றும் சங்கிலி வாங்கி அதற்கான தொகையை ஜி-பே மூலம் செலுத்தியதாக கூறிய நிலையில் ஏமாற்றி சென்று விட்டது தெரியவந்தது. இதையடுத்து தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா எல்ல புடைப்பான்பட்டியை சேர்ந்த சொக்கன் என்பவரது மகன் சபரி (வயது 30) கைது செய்யப்பட்டு ஏமாற்றிய நகையை மீட்டு அவரை காங்கேயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story