கோவை ரயில் நிலையத்தில் 8.2 கிலோ கஞ்சா பறிமுதல் – வாலிபர் கைது !

கோவை ரயில் நிலையத்தில் 8.2 கிலோ கஞ்சா பறிமுதல் – வாலிபர் கைது !
X
பொதுப் பெட்டியில் கஞ்சா மறைத்து கடத்தல் முயற்சி – போலீசாரின் சோதனையில் உடனடி கைது.
கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையும், போதைப்பொருள் தடுப்பு பிரிவும் இணைந்து நடத்திய சோதனையில், பொதுப்பெட்டியில் 8.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கொல்கத்தா ஷாலிமாரிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயிலில் பயணித்த பொள்ளாச்சியைச் சேர்ந்த சபரிநாத் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், போதைப்பொருள் கடத்தல் முயற்சிகள் அதிகரித்து வருவதால் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story