திருச்செங்கோடு நகராட்சியின் சாதாரண கூட்டம் நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்82 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது
Tiruchengode King 24x7 |26 Dec 2025 9:04 PM ISTதிருச்செங்கோடு நகராட்சியின் சாதாரணகூட்டம்நகரமன்ற தலைவர் நளினிசுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்றது. நாய் தொல்லைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் நெசவாளர் காலனி இடுகாட்டில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து உறுப்பினர்கள் பேச்சு
திருச்செங்கோடு நகராட்சியின் சாதாரண கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமை வகித்தார் ஆணையாளர் வாசுதேவன் துப்புரவு அலுவலர் சோழராஜ்,நகர் நல அலுவலர் டாக்டர் மணிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக் குறளை வாசித்து நகர்மன்ற தலைவர்நாளைக்கு சுரேஷ்பாபு கூட்டத்தை தொடங்கி வைத்தார் தீர்மானங்களின் மீது பேசிய உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து நகர்மன்றத்சுரேஷ்பாபு பேசிய போது கூறியதாவது பத்தாவது வார்டு அதிமுக உறுப்பினர் ராஜவேல் நகர்மன்ற கூட்டஅரங்கில் யூ வடிவ மேசைகள் அமைப்பதாக கூறப்பட்டது எந்த நிலையில் உள்ளது கொக்கராயன் பேட்டை நீரேற்று நிலையத்தில் தற்போது பயன்படுத்தப் படாமல் நகராட்சி இடம் காலியாக உள்ளது.அமைப்பாளர்கள் அந்த இடத்தை ஆக்கிரமிப்பதற்குள் நகராட்சியின் பயன்பாட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டும் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு சட்டமன்ற உறுப்பினர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிஅல்லது வேறு ஏதாவது நிதியை பயன்படுத்தி சோலார் பேனல் அமைத்து அங்கிருந்து பெறப்படும் மின்சாரத்தை நகராட்சி மின் பயன்பாட்டிற்குஎடுத்துக் கொள்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது விரைவில் அது நிறைவேற்றப்படும் 2வது வார்டு அதிமுக உறுப்பினர் கார்த்திகேயன் குடிநீர் வழங்குவது எட்டு நாள் பத்து நாள் ஆகும் நிலையில் குடிநீர் கட்டணம் 5 சதவீதம் அதிகரித்துள்ளது.குடிநீரே வராத நிலையில் எதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள் நகர்மன்ற உறுப்பினர்கள் 200 இணைப்புகளைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளதுஎப்படி சாத்தியமாகும் என தெரியவில்லை. குடிநீர்கட்டண உயர்வைமறுபரிசீலனை செய்ய வேண்டும் சண்முகபுரம் பகுதியில் எஸ் டி பி பிளான்ட்க்குகாக பணிகள் நடந்த போது சில குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை இதுவரை சரி செய்யவில்லை நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு குடிநீர் கட்டணத்தைஒரே தடவையில்அதிகப்படுத்தகூடாது என்பதற்காக தான்இங்கு சதவீதம் மட்டும் உயர்த்தப் பட்டுள்ளது.மெயின்குழாய்களில்உடைப்புகள் ஏற்பட்டுள்ளதால் தான் குடிநீர் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது விரைவில் சீர்படுத்தப்படும் அதேபோல் சண்முகபுரம் பகுதியில்போன குழாய்கள் விரைவில் அமைத்து தரப்படும் எட்டாவது வார்டு பாஜக உறுப்பினர் தினேஷ் குமார் எனது வார்டில் துப்புரவு பணியாளர்கள் ஆறு பேர் பணியில் இருந்தனர் தற்போது மூன்று பேர் மட்டுமே உள்ளனர் இதனால் வடிகால்களை வேலை செய்ய முடியாமல் தடுமாறுகிறார்கள் துப்புரவு அலுவலர் சோழராஜ் திங்கட்கிழமை புதிய ஆட்கள் அனுப்பப்படுவார்கள் 32 வது வார்டு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உறுப்பினர் அசோக்குமார் 24 வது வார்டு திமுக உறுப்பினர் மகேஸ்வரி எங்களது வார்டு பகுதிகளில் கோழி இறைச்சி கழிவுகள் மற்றும் மீன் கழிவுகள் போன்றவற்றை சாக்கடைகளில் கொட்டி விடுகின்றனர் இது தொடர்பாக பலமுறை தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை உடனடியாக அந்த பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுத்து யார் கொட்டுகிறார்கள் என்பதை அறிந்து அபராதம் விதிக்க வேண்டும் துப்புரவு அலுவலர் சோழராஜ் உறுப்பினர்கள் இதுகுறித்து எங்களது கவனத்திற்கு கொண்டு வந்த உடன் ஆய்வு செய்து கொட்டுபவர்களை எச்சரித்து அபராதம் விதித்துள்ளோம் இனிமேல் யாராவது அப்படி கொட்டினால் உடனடியாக எங்களுக்கு தகவல் கொடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம் சிசிடிவி கேமரா அமைத்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் 4வது வார்டு திமுக உறுப்பினர்ரமேஷ் மாற்றுத்திறனாளி உறுப்பினர் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் மாற்றுத்திறனாளிகள் நகராட்சியில் பொறியாளர் பிரிவில் ஏதாவது பணிகள் நடக்க வேண்டி இருப்பதாக இருந்தால்ஏறி வர முடியாமல் சிரமப்படுகின்றனர் லிப்ட் வசதி செய்து கொடுக்க வேண்டும்.எங்களது வார்டு பகுதியில் கேஸ் குழாய் அமைத்து கண்ட்ரோல் ரூம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது குழி தோண்டப்பட்டு வருகிறது குடியிருப்புகள் இல்லாத பகுதியில் தான் இந்த பணிகள் நடக்க வேண்டும் ஆனால் மக்கள் குடியிருக்கும் பகுதியில் கேஸ் டேங்க்மற்றும் குடோன் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதுஇதனை தடுத்து நிறுத்த வேண்டும். நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் நகராட்சியில் ஏற்கனவே 34 கோடி மின் கட்டண பாக்கி உள்ளதால் மேற்கொண்டு எந்த அதிகப்படியான வசதிகளும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம் 2026 ஆம் ஆண்டு நிச்சயமாக லிப்ட் வசதி அமைத்து தரப்படும். நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கேஸ் கண்ட்ரோல் ரூம் அமையப்பெற்றால் இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கவனத்திற்கு கொண்டு சென்று அவனை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் பத்தாவது வார்டு அதிமுக உறுப்பினர் ராஜவேல் ஈரோடு ரோட்டில் கல்வெட்டு பாலம் அமைக்கும் பணி மெதுவாக நடைபெறுகிறது இதனால் பொதுமக்கள்பள்ளி குழந்தைகள் பேருந்துகள் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை இடம் சொல்லி வரைந்து பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கூட்ட அரங்கில் டைல்ஸ்களில் உடைப்புகள் ஏற்பட்டுள்ளது இதனை விரைந்து சரி செய்ய வேண்டும் நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு நெடுஞ்சாலை துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைந்து பணிகள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கூட்ட அரங்கில் நேற்றுதான் டைல்ஸ் உடைப்பு ஏற்பட்டுள்ளது உடனடியாக செய்யப்படும். 27 ஆவது வார்டு திமுக உறுப்பினர் அண்ணாமலை நரிப்பள்ளம் பகுதியில் மின் கம்பங்கள் உள்ளது ஆனால் விளக்குகள் இல்லை உடனடியாக வழக்குகள் அமைத்து தர வேண்டும் சி எச் பி காலனி 1, 2, வது தெருக்கள் மற்றும்நரிப்பள்ளம் பகுதியில் சிமெண்ட் ரோடு அமைத்து தர வேண்டும் மூன்று மாதமாக ரோடு மிக மோசமாக உள்ளது நரிப்பள்ளம் பகுதியில் உள்ள ஆள்துறை கடலில் மின் மோட்டார் அமைத்து தர வேண்டும் அம்பேத்கர் சிலை அருகே 50 மீட்டர்அளவுக்கு மட்டுமே வடிகால் அமைக்கப்படாமல் உள்ளது அதனை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் டி சி எம் எஸ் க்கு பின்பக்கம் உள்ள பகுதியில் சுவர் இடிந்து விழுந்த மண் இன்னும் அல்ல படாமல் உள்ளது அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் மிஷின்களை கொண்டு தான் குறுகலான பகுதியில் உள்ளதை அகற்ற வேண்டும் என்பதால் காலதாமதம் ஆகிறது திங்கட்கிழமைக்குள் மண்அள்ளி முடிக்கப்படும்.50 மீட்டர்வடிகால் அமைக்கும் பணிக்கு நமக்கு நாமே திட்டத்தில் தான் பணி செய்ய முடியும் நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் 50 மீட்டர் வடிகால் பணி நமக்கு நாமே திட்டத்தில் செய்து முடிக்க ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். நகர் மன்ற உறுப்பினர்கள் எட்டாவது வார்டு தினேஷ்குமார் பத்தாவது வார்டு ராஜவேல் 24 வது வார்டு மகேஸ்வரி இரண்டாவது வார்டு கார்த்திகேயன் 27வது வார்டு அண்ணாமலை ஆகியோர் ஒரே நேரத்தில் நாய் தொல்லை அதிகமாக இருப்பதாகவும் ஊசி போடப்பட்டதாக கூறப்படும் நாய்கள் குட்டிகள் போடுவது எப்படி எனவும் நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் சற்று அழுத்தம் கொடுத்தும் கேட்டனர் நகர் நல அலுவலர் டாக்டர் மணிவேல் திருச்செங்கோடு நகரப் பகுதிகளில் தோராயமாக 1373தெரு நாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டு அவற்றில் 746 நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நாய் என்பதை அடையாளப்படுத்தும் வகையில் இடப்பட்டுள்ளது. அவ்வாறு குறி வருத்தப்படாத நாய்கள் இருப்பது தெரிந்தால் நகர்மன்ற உறுப்பினர்கள் தகவல் கொடுத்தால் உடனடியாக நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் இரண்டாவது வார்டு அதிமுக உறுப்பினர் கார்த்திகேயன் எங்களது கோரிக்கையை நகர் மன்ற கூட்டத்தில் தெரிவிக்கிறோம் நகர்மன்ற தலைவரும் அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார் ஆனால் அதிகாரிகள் அதனை செயல்படுத்துவதில்லை இது என்ன காரணம் என தெரியவில்லை உடனடியாக நகர மன்ற கூட்டத்தில் நகர் மன்ற தலைவர் குரலுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.சர்வே இருக்கு என தனி அறை ஒதுக்கி பணிகள் கொடுத்தாலும் சர்வேயர் நகராட்சி அலுவலகத்தில் இருப்பதில்லை அவரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் கொடுத்தால் பல நாட்கள் ஆனாலும் தீர்க்கப்படுவதில்லை நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு வருவாய் கோட்டாட்சியரின் கவனத்திற்கு இது கொண்டு செல்லப்பட்டு கூடுதல் சர்வேயர் நியமிக்கவும் அல்லது இந்த சர்வேயிற்கு பதிலாக வேறு சர்வேயர் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஐந்தாவது வார்டு திமுக உறுப்பினர் ராஜா நெசவாளர் காலனி இடுகாட்டுப் பகுதியில் குப்பைகள் தேங்கியுள்ளது குப்பைகளை அகற்ற அரைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எந்த அளவில் உள்ளது.நெசவாளர் காலனி 1,2,3,ஆகிய தெருக்களில் குடிநீர் சப்ளை குறைவாக உள்ளது இதே போல் நெசவாளர் காலனி பள்ளியில் மூன்று டேங்குகள் உள்ளது இதில் கேட் வால்வுகள் திறப்பதில் சிரமம் உள்ளது.எனவே 60 ஆயிரம் லிட்டர் வாட்டர் டேங்க் ஒன்று அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளியில் ஸ்டோரி தொட்டி ஒன்று அமைத்து தர வேண்டும் பயோ மைனிங் முறை எப்போது தொடங்கப்படும் என்பதை தெரிவிக்க வேண்டும் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபுபயோ மைனிங் முறையில் குப்பைகளை அகற்ற டெண்டர் விடப்பட்டுள்ளது விரைவில் பணிகள் துவங்கும் 60 ஆயிரம் லிட்டர் வாட்டர் டேங்க் நிலத்தடி நீர் தொட்டி ஆகியவை அமைத்து தர உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும். 1வது வார்டுதிமுக உறுப்பினர் மாதேஸ்வரன் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்தமகளிர் உரிமைத் தொகை கூடுதலாக மேலும் 18 லட்சம் பேருக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ள முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு நிச்சயமாக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் மேலும் நகர மன்ற உறுப்பினர்கள் மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்களுக்கு அடுத்த கட்ட விண்ணப்ப படிவங்களை பெற்றுத் தர வேண்டும் தாமரைச்செல்வி மணிகண்டன் குமரேசபுரம் பகுதியில் மாந்தோப்பு பகுதியில் கம்பங்கள் உள்ளது அங்கு மின் விளக்குகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் 23வார்டுதிமுக நகர் மன்ற உறுப்பினர் புவனேஸ்வரி ரமேஷ் எஸ் பி அலுவலகம் அமைந்துள்ள பகுதி குவாட்டர்ஸ் பகுதியில் 8 மாதங்களுக்கு முன்பு விளக்குகள் போட வேண்டுமென டிஎஸ்பி மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனது வார்டில் 200 மீட்டர் நீளத்திற்கு உப்பு நீர் குழாய் அமைத்துக் கொடுத்தால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு மின்கம்பங்களில் இருந்து ஒயர்கள் இல்லையென்றால் விளக்குகள் பொருத்தப்படாமல் இருக்கும் உடனடியாக வழக்குகள் கொடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நிலத்தடி நீர் குழாய்கள் அமைக்க அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் கூறினார்.
Next Story


